விஷால் படத்தை தயாரிக்கும் முருகதாஸ் – இயக்குனர் இவர்தான்!

Webdunia
வியாழன், 24 டிசம்பர் 2020 (17:27 IST)
இயக்குனர் முருகதாஸ் தயாரிக்கும் புதிய படத்தில் விஷால் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் விஜய் படத்தில் விலகிய பிறகு இப்போது அனிமேஷன் திரைப்படம் ஒன்றை இயக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இதற்கிடையில் சோனி நிறுவனத்துடன் இணைந்து  5 படங்களை தயாரிக்கவும் முடிவு செய்துள்ளார். அதில் முதல் படத்தில் நடிகர் விஷால் நடிக்க உள்ளார்.

துப்பறிவாளன் 2 படத்தின் படப்பிடிப்பை லண்டனில் இப்போது நடத்த முடியாத சூழலால் இந்த படத்தில் நடிக்க உள்ளாராம் விஷால். இந்த படத்தை மான் கராத்தே படத்தை இயக்கிய முருகதாஸின் உதவியாளர் திருக்குமரன் இயக்க உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்