இயக்குனர் சங்கத்தில் இருந்து முருகதாஸ் நீக்கம்?

Webdunia
செவ்வாய், 30 அக்டோபர் 2018 (16:15 IST)
சர்கார் திரைப்படத்தின் கதை இயக்குனர் முருகதாஸ் கதை அல்ல இணை இயக்குனர் வருண் ராஜேந்திரனுடையது என கூறி படத்தை வெளியிடக்கூடாது என கூறப்பட்டிருந்த நிலையில் இந்த பிரச்சனை முடிந்து படம் சொன்னபடி வெளியாகவுள்ளது. 
 
மேலும், வருணுக்கு இழப்பு தொகை வழங்கப்பட்டதோடு, படத்தில் அவரது பெயரும் போடப்படும் என கூறப்பட்டுள்ளது. முருகதாஸும் சர்கார் கதை என்னுடையது, கதையின் கரு மட்டும் ஒன்றாக இருந்துள்ளது என தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 
 
இந்நிலையில், பிரச்சனை முடிந்தது என நினைத்தால் அடுத்த பிரச்சனை வந்துள்ளது. ஆம், முருகதாஸை இயக்குனர் சங்கத்தில் இருந்து நீக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளது. 
 
இது குறித்து தெரிவிக்கப்பட்டிருப்பது பின்வருமாறு, சர்கார் படத்தின் கதை, வருண் என்பவருடையது என்பதை இயக்குநர் முருகதாஸ் ஒப்புக்கொண்டுள்ளார். இன்று சர்கார் படத்தின் கதையை திருடியிருப்பதை அவரே ஒப்புக்கொண்டிருப்பதன் மூலம், கத்தி படத்தின் கதையும் அப்படிதான் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. 
 
இது அறிவு திருட்டு மட்டுமல்ல, மூளைச்சுரண்டலும் ஆகும். நேர்மையற்ற மனிதராக இன்று முருகதாஸ் அம்பலபட்டு நிற்கிறார். இந்த மாதிரி திருட்டு இயக்குநர்களை திரை உலகம் அப்புறப்படுத்த வேண்டும். இயக்குநர் சங்கத்திலிருந்து முதலில் முருகதாஸை நீக்க வேண்டும் என வன்னி அரசு அறிக்கை வெளியிட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்