ஐஸ்வர்யா வெளியேற்றமா? பிக்பாஸ் வீட்டில் திடீர் திருப்பம்

Webdunia
சனி, 15 செப்டம்பர் 2018 (19:35 IST)
ஒவ்வொரு வாரமும் ஐஸ்வர்யா பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுவதில் இருந்து தப்பித்து கொண்டே வருகிறார். கடந்த வாரம் நிச்சயம் ஐஸ்வர்யா வெளியேறுவார் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் மக்களின் விருப்பத்திற்கு மாறாக பிக்பாஸ் அவரை காப்பாற்றிவிட்டு, சென்றாயனை வெளியேற்றிவிட்டார். இதனால் கமல்ஹாசனுக்கு கூட இந்த நிகழ்ச்சியின் மீது வருத்தம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த வாரமாவது ஐஸ்வர்யா வெளியேற்றப்படுவார் என்று நினைத்து கொண்டிருந்த நிலையில் படப்பிடிப்பு தளத்தில் இருந்து தற்போது வெளிவந்திருக்கும் தகவலின்படி இந்த வாரம் மும்தாஜ் வெளியேற்றப்பட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

எனவே மீண்டும் ஒருமுறை ஐஸ்வர்யாவை பிக்பாஸ் காப்பாற்றிவிட்டதாகவே தெரிகிறது. இன்னும் இரண்டு வாரம் மட்டுமே பிக்பாஸ் நிகழ்ச்சி இருக்கும் நிலையில் இறுதி போட்டிக்கு ஜனனியுடன் மோதும் மூன்று போட்டியாளர்கள் யார் யார்? என்பது அனேகமாக அடுத்த வாரம் தெரிந்துவிடும்
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்