தாய்லாந்து - கம்போடியா போர் நிறுத்தத்திற்கு நான் தான் காரணம்: டிரம்ப்

Siva

ஞாயிறு, 27 ஜூலை 2025 (08:50 IST)
உலகில் எங்கு போர் நிறுத்தம் ஏற்பட்டாலும், அதற்கு நான் தான் காரணம் என்று விளம்பரம் தேடி கொள்வதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீது நீண்டகாலமாக குற்றச்சாட்டு இருந்து வருகிறது. இந்த நிலையில், தற்போது தாய்லாந்து மற்றும் கம்போடியா ஆகிய நாடுகள் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
 
கடந்த சில நாட்களாக தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையே எல்லை பிரச்சனை காரணமாக மோதல் போக்கு ஏற்பட்டு வந்தது. இந்த சூழலில்தான், இரு நாடுகளும் தற்போது போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளதாக ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
 
"இரு நாடுகள் தொடர்ச்சியாக போர் செய்தால், அமெரிக்காவுடனான வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்படும் என எச்சரித்ததாகவும், அதனை தொடர்ந்து போர் முடிவுக்கு வந்ததாகவும்" ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், "இரு நாடுகளும் அமெரிக்காவுடன் வணிகம் செய்து வரும் நிலையில், இரு நாடுகளும் தொடர்ந்து மோதிக்கொண்டால் ஒப்பந்தங்கள் அனைத்தும் ரத்து செய்யப்படும் என்று தாய்லாந்து பிரதமரிடம் தொலைபேசியில் தெரிவித்தேன். இதனை அடுத்து உடனடியாக போர் நிறுத்தத்திற்கு இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன," என்று கூறியுள்ளார்.
 
ஏற்கனவே இந்தியா - பாகிஸ்தான் போர், ஈரான் - இஸ்ரேல் போர் ஆகியவற்றை நான்தான் நிறுத்தினேன்," என்று அவர் முன்பு கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.  
 
Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்