திரைப்படமாகிறது மேகாலயா ஹனிமூன் கொலை: ராஜா குடும்பத்தினர் சம்மதம்.. டைட்டில் அறிவிப்பு..!

Mahendran

புதன், 30 ஜூலை 2025 (10:10 IST)
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்த  ராஜா ரகுவன்ஷி, மேகாலயாவிற்கு தனது மனைவியுடன் தேனிலவு சென்றபோது கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த கொலையில் அவரது மனைவி சோனம் மற்றும் அவரது காதலன் என கூறப்படும் நபர் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தற்போது, இந்த குற்ற சம்பவத்தை திரைப்படமாக்க ராஜாவின் குடும்பத்தினர் சம்மதம் தெரிவித்துள்ளனர்.
 
எஸ்.பி. நிம்பாவத் இயக்கும் இந்தப் படத்திற்கு "ஹனிமூன் இன் ஷில்லாங்" என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த கொலை வழக்கு குறித்த வரவிருக்கும் படத்திற்கு நாங்கள் சம்மதம் தெரிவித்தோம். எங்கள் சகோதரனின் கொலையின் கதையை பெரிய திரைக்கு கொண்டு வரவில்லை என்றால், யார் சரி, யார் தவறு என்பதை மக்கள் தெரிந்துகொள்ள முடியாது என்று நாங்கள் நம்புகிறோம்," என்று ரகுவன்ஷியின் அண்ணன் சச்சின் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். 
 
இயக்குநர் நிம்பாவத் இந்த படம் குறித்து கூறியபோது ’இந்த படத்தின் மூலம், இதுபோன்ற துரோக சம்பவங்கள் நிறுத்தப்பட வேண்டும் என்ற செய்தியை பொதுமக்களுக்கு வழங்க விரும்புகிறோம்," என்று கூறினார்.
 
இந்த படத்தில் நடிக்கும் நடிகர்கள் தேர்வு நடைபெற்று வருவதாகவும், படத்தின் திரைக்கதை தயாராக இருப்பதாக நிம்பாவத் தெரிவித்தார். "80 சதவீதம் படப்பிடிப்பு இந்தூரிலும், மீதமுள்ள 20 சதவீதம் மேகாலயாவின் பல்வேறு பகுதிகளிலும் நடைபெறும்," என்றும் அவர் மேலும் கூறினார்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்