30 ஆண்டுகளுக்குப் பிறகு ரி ரிலீஸில் கலக்கும் சந்திரமுகியின் ஒரிஜினல் வெர்ஷன் ‘மணிச்சித்திரதாழ்’!

vinoth
செவ்வாய், 20 ஆகஸ்ட் 2024 (07:48 IST)
2005 ஆம் ஆண்டு வெளியான சந்திரமுகி திரைப்படம் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய சாதனையைப் படைத்தது. கன்னடத்தில் வெளியான தன்னுடைய ஆப்தமித்ரா திரைப்படத்தை பல மாற்றங்களோடு தமிழில் உருவாக்கி இருந்தார் பி வாசு.

ஆனால் இந்த இரு படங்களுக்கும் மூலம் என்றால் அது மலையாளத்தில் பாசில் இயக்கத்தில் வெளியான ‘மணிச்சித்திரதாழ்’ திரைப்படம்தான். மோகன்லால், ஷோபனா மற்றும் சுரேஷ் கோபி ஆகியோர் நடிப்பில் உருவான இந்த திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது.

தமிழ், தெலுங்கு போல இல்லாது இந்த படம் ஒரு சைக்கலாஜிக்கல் த்ரில்லர் போல உருவாக்கப்பட்டிருக்கும். இந்நிலையில் 30 ஆண்டுகள் கழித்து அந்த திரைப்படம் புதுப்பிக்கப்பட்டு தற்போது ரி ரிலீஸ் ஆகி வசூலில் கலக்கி வருகிறது. இரண்டு நாட்களில் 1.10 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்து உள்ளதாம்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்