பிக்பாஸ் நிகழ்ச்சியில் மிஸ் சென்னை பட்டம் வென்ற மாடல் அழகி: பரபரப்பு தகவல்

Webdunia
வியாழன், 24 செப்டம்பர் 2020 (08:04 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியில் மிஸ் சென்னை பட்டம் வென்ற மாடல் அழகி
கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஏற்கனவே போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளன. நடிகைகள் லட்சுமிமேனன், அமிர்தா ஐயர், சஞ்சனா ஷெட்டி, கிரண் ரத்தோட், ரம்யா பாண்டியன், ஷிவானி நாராயணன், உள்பட பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதாகவும் அவர்கள் தற்போது சென்னையிலுள்ள ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்தன.
 
இந்த நிலையில் சென்னையை சேர்ந்த மாடல் அழகி ஒருவர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. மிஸ் சென்னை பட்டத்தை வென்ற சம்யுக்தா கார்த்திக் தான் அந்த போட்டியாளர். இவர் ஒரு சில திரைப்படங்களிலும் தொலைக்காட்சி சீரியல்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது 
 
ஏற்கனவே கடந்த சீசனில் யாஷிகா ஆனந்த், ரைசா வில்சன், உள்பட சில மாடல் அழகிகள் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிலையில் இந்த சீசனிலும் ஒரு மாடல் அழகி கலந்து கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
வரும் அக்டோபர் நான்காம் தேதி பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கவிருக்கும் நிலையில் அன்றைய தினம் போட்டியாளர்கள் அனைவரும் அறிமுகம் செய்யப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்