குழந்தையின் முதல் பிறந்த நாளை உற்சாகமாக கொண்டாடிய எமிஜாக்சன்!

Webdunia
வியாழன், 24 செப்டம்பர் 2020 (07:58 IST)
குழந்தையின் முதல் பிறந்த நாளை உற்சாகமாக கொண்டாடிய எமிஜாக்சன்!
ஏ.எல். விஜய் இயக்கிய மதராச பட்டணம் என்ற திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமானவர் பிரிட்டனைச் சேர்ந்த எமி ஜாக்சன். இவர் ஜார்ஜ் என்ற தொழிலதிபரை காதலித்த நிலையில் கடந்த ஆண்டு தாய்மை அடைந்தார். இந்த நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இவருக்கு குழந்தை பிறந்தது 
 
இந்த நிலையில் இந்த குழந்தைக்கு ஆண்ட்ரியாஸ் என்ற பெயர் வைத்த எமிஜாக்சன் தனது சமூக வலைத்தளத்தில் குழந்தையின் விதவிதமான புகைப்படங்களை பதிவு செய்தார்.
 
இந்த நிலையில் தற்போது இந்த குழந்தையின் முதல் பிறந்த நாளை தனது வீட்டிலும் உற்சாகமாக கொண்டாடியுள்ளார். இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் குழந்தையின் முதல் பிறந்த நாள் குறித்த காட்சிகள் இடம்பெற்றுள்ளன 
 
இந்த தாய்மை தினத்தன்று நான் ஆசிர்வதிக்கப்பட்டவள் என்றும் என் குழந்தை ஆண்ட்ரியாஸ் வருவதற்கு முன்பாக என் வாழ்க்கையை நான் நினைவு கூற விரும்பவில்லை என்றும் அந்த வாழ்க்கை அர்த்தமற்றதாக இருந்ததாகவும் அந்த தேவதை குழந்தையை ஒவ்வொரு நாள் காலையிலும் பார்க்கும்போதுதான் மிகுந்த உற்சாகம் அடைகிறேன் என்றும் கூறினார்
 
மேலும் ஒரு ரோல் மாடலாக, பாதுகாவலராக, நண்பராக மற்றும் தாயாக தனது குழந்தைக்கு நான் இருக்க விரும்புகிறேன் என்றும் எமி ஜாக்சன் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார் எமி ஜாக்சனின் இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

My beautiful baby boy’s special day ✨

A post shared by Amy Jackson (@iamamyjackson) on

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்