ஓடிடிக்கு செல்லும் சிவாவின் பேய் கலாட்டா திரைப்படம்!

Webdunia
வியாழன், 1 ஜூலை 2021 (10:26 IST)
மிர்ச்சி சிவா மற்றும் நிக்கி கல்ராணி நடிப்பில் உருவாகியுள்ள இடியட் திரைப்படம் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாக உள்ளது.

சிவா நடிப்பில் லொள்ளுசபா மற்றும் தில்லுக்கு துட்டு படப்புகழ் நய்யாண்டி இயக்குனர் ராம்பாலா இயக்கியுள்ள திரைப்படம் இடியட். ராம்பாலா இயக்கிய இரண்டு படங்களும் பேய்களை கலாய்க்கும் விதமாக உருவாக்கப்பட்டவை. அந்த வகையில் இப்போது உருவாகியுள்ள இடியட் படம் அதே பாணியில் உருவாக்கப்பட்டுள்ளது. அதை இணையத்தில் வெளியான இடியட் படத்தின் டிரைலர் உறுதி செய்துள்ளது. இந்த டிரைலர் இளைஞர்கள் இடையே கவனம் பெற்றுள்ளது.

இந்நிலையில் கொரோனா பாதிப்புகளால் திரையரங்குகள் மூடப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளது. இந்த படத்தின் ரிலீஸ் உரிமையை டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் வாங்கியுள்ளது. விரைவில் இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என சொல்லப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்