விஜய்யின் மாஸ்டர் பட வசூல் குறித்து அமைச்சர் விமர்சனம்

Webdunia
புதன், 20 ஜனவரி 2021 (17:06 IST)
திரைப்படங்கள் வெற்றி பெற்றுள்ளது என்பதைக் காட்டுவதற்காக அப்படங்களின் வசூல் அதிகரித்துக் கூறுவது இயல்பானது என அமைச்சர் பாண்டிராஜன் தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான படம் மாஸ்டர். இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாகவும். விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்திருந்தார். மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள இப்படம் ஒரே வாரத்தில் 150 கோடி வசூல் செய்துள்ளது.

கடந்த 13 ஆம் தேதி உலகமெங்கும் மாஸ்டர் படம் கலவையான விமர்சனம் பெற்று, இந்தியாவில் 50% தியேட்டர் இருக்கையிலேயே வசூல் சாதனை புரிந்துள்ளதால் விஜய் ரசிகர்கள் இதுகுறித்து டுவிட்டரில் ஹேஸ்டேக் உருவாக்கி ட்ரெண்டிங் செய்தனர்.

இந்நிலையில் மாஸ்டர் பட வசூல் குறித்த கேள்விக்கு  தமிழக அமைச்சர் பாண்டியராஜன் விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது :

திரைப்படங்கள் வெற்றி பெற்றுள்ளது என்பதைக் காட்டுவதற்காக  வசூல் ரூ.2 கோடி வந்தாலும்  அதை ரூ.20 கோடி என்று கூறுவது இயல்பானது என்று மறைமுகமாகக் கூறியுள்ளார்.

விஜய் ரசிகர்கள் இதற்கு சமூக வலைதளங்களில் கருத்துக் கூறி வருகின்றனர். அதில். விஜய்யின் படங்கள் மாஸ்டர் மட்டுமல்ல போக்கிரி படம் முதல் பெரும் வசூல் சாதனை நிகழ்த்தி வருவதாகக் கூறி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்