‘மெர்சல்’ தோல்விப்படமா? விநியோகஸ்தர் பதில்

Webdunia
புதன், 24 ஜனவரி 2018 (15:25 IST)
‘மெர்சல்’ தோல்விப்படமா என்ற கேள்விக்கு விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியம் பதில் அளித்துள்ளார்.
விஜய் மூன்று வேடங்களில் நடித்து கடந்த தீபாவளிக்கு ரிலீஸான படம் ‘மெர்சல்’. அட்லீ இயக்கிய இந்தப் படத்தில் நித்யா மேனன், சமந்தா, காஜல் அகர்வால் என மூன்று ஹீரோயின்கள் நடித்தனர். 100 கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்து எடுக்கப்பட்ட இந்தப் படத்தின் வசூல், 300 கோடி ரூபாயைத்  தாண்டியதாகக் கூறப்படுகிறது.
 
ஆனால், சிலர் ‘மெர்சல்’ படம் தோல்வி என்றே குறிப்பிடுகின்றனர். இதுகுறித்து விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியத்திடம் கேட்டால், “கோயம்புத்தூர் ஏரியாவில் ‘மெர்சல்’ படம் 12 கோடி ரூபாய் வசூலித்தது. சொல்லப்போனால், ரஜினியின் ‘எந்திரன்’ படத்தைவிட அதிக வசூல்.
 
நான் விசாரித்த வரையில், எல்லா விநியோகஸ்தர்களுக்குமே நல்ல வசூல் தான். ஆனால், தயாரிப்பு செலவு எவ்வளவு என்பது எனக்குத் தெரியாததால், உண்மையான லாபம் எவ்வளவு என்று எனக்குத் தெரியாது. ஆனால், ‘மெர்சல்’ தோல்விப்படம் கிடையாது என்று நிச்சயமாக சொல்ல முடியும்” என்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்