இந்திய அணி சந்தித்த தோல்வி வழக்கமானதோ, எதிர்பார்க்கப்பட்டதோ அல்ல. கோலி ஒரு உணர்வுபூர்வமான கிரிக்கெட் வீரர். ஒரு பேட்ஸ்மெனாக தவறு செய்யும் போது அதனை ஒப்புக் கொள்ளக்கூடியவர், அதே போல் அணி சரியாக விளையாட போதும் அதனையும் ஒப்புக் கொள்வார்.
அவர் புரோசஸ், எதிர்காலத்திற்காக திட்டமிடுகிறோம் (இவை தோனி குறிப்பிடும் வார்த்தைகள்) போன்ற வார்த்தைகள் பின்னால் தோல்வியை மறைப்பவர் அல்ல. ஆனாலும் இந்திய அணி நம்பர் 1 அணிதானா என்ற கேள்வியையும், 12 கேட்ச்களை நழுவ விட்டுவிட்டு அதற்கு தயாரிப்பின்மையையும் தென் ஆப்பிரிக்க சூழலையும் குறை கூற முடியாது.