ஒரு மாதத்துக்குள் ஒரு கோடியைத் தாண்டிய விஜய் பாட்டு

Webdunia
ஞாயிறு, 10 செப்டம்பர் 2017 (13:38 IST)
‘மெர்சல்’ படத்தில் இடம்பெற்று பாடல் ஒன்று, ஒரு கோடி பார்வையாளர்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது.


 
 
விஜய் மூன்று வேடங்களில் நடித்திருக்கும் படம் ‘மெர்சல்’. அட்லீ இயக்கியுள்ள இந்தப் படத்தில், நித்யா மேனன், சமந்தா, காஜல் அகர்வால், எஸ்.ஜே.சூர்யா, சத்யராஜ், வடிவேலு, கோவை சரளா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
 
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கும் இந்தப் படம், வருகிற தீபாவளிக்கு ரிலீஸாகிறது. இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள ‘ஆளப்போறான் தமிழன்’ பாடலின் லிரிக் வீடியோ, கடந்த மாதம் 11ஆம் தேதி வெளியிடப்பட்டது. 
 
அந்த வீடியோ, இதுவரை ஒரு கோடிக்கும் அதிகமான பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது.
அடுத்த கட்டுரையில்