பிரபல மாடலான மீரா மிதுன் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்றவர். தொடர்ந்து படங்கள் சிலவற்றில் நடித்து வரும் மீரா மிதுன் அண்மை காலமாக பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார், அந்த வகையில் சமீபத்தில் சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்த மீரா மிதுன் அதில் தாழ்த்தப்பட்ட சமூகம் ஒன்றை கேவலமாக பேசியிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து போலீஸில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் நடிகை மீரா மிதுன் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக நேரில் ஆஜராக மீரா மிதுனுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. சாதி பிரச்னை முடிவதற்குள் மத பிரச்சனையை ஏற்படுத்தியுள்ளார் மீராமீதுன்.
ஆம் ஜோ மைக்கேல் தனது ட்விட்டரில் சாய் பாபா படத்திற்கு அருகில் அமர்ந்து மீரா மிதுன் கஞ்சா அடித்து புகைவிடும் புகைப்படத்தை வெளியிட்டு, " போன வாரம் ஜாதி, இந்த வாரம் மதம். இந்த வீடியோவை மீரா மிதுன் வெளியிட்டு பின்னர் டெலீட் செய்துவிட்டார். என கூறி முதல்வர் ஸ்டாலினுக்கும் சென்னை போலீசுக்கும் டேக் செய்ததோடு என்ன இதெல்லாம் மோடி ஜி? இவருக்கு பின்னால் யார் இருக்கிறார் என்று கண்டுபிடிக்க வேண்டும் என பதிவிட்டுள்ளார்.
WTH !!!
Pona Week Caste Ippo Religion
This video has been uploaded and deleted in her Account