சமீபகால இளம் சென்சேஷன் நடிகையாக உருவாகி வருகிறார் மீனாட்சி சௌத்ரி. தெலுங்கு சினிமாவில் முதல் முதலாக அறிமுகமான மீனாட்சி சௌத்ரி ஹிட், கில்லாடி மற்றும் குண்டூர் காரம் ஆகிய படங்களின் மூலம் கவனம் பெற்றார்.
கோட் படத்தில் அவருக்கு எந்த முக்கியத்துவமும் இல்லாத கதாபாத்திரமாகவே அமைந்திருந்தது. படம் வெளியான போது அவர் நிறைய கேலிகளை எதிர்கொண்டார். இது சம்மந்தமாக பேசியுள்ள அவர் “கோட் படம் வந்த போது எழுந்த கேலிகளால் நான் ஒருவாரத்துக்கு மன அழுத்தத்தில் இருந்தேன். ஆனால் லக்கி பாஸ்கர் படத்துக்குக் கிடைத்த வரவேற்பைப் பார்த்ததும் இனிமேல் நல்ல கதாபாத்திரங்களாக தேடி நடிக்க வேண்டும் என நினைத்தேன்” எனக் கூறியுள்ளார்.