மயில்சாமி நடித்த கடைசி திரைப்படம் ‘கிளாஸ்மேட்ஸ்’… முதல் சிங்கிள் ரிலீஸ்!

Webdunia
திங்கள், 20 மார்ச் 2023 (15:14 IST)
தமிழ் சினிமாவின் பெயர்பெற்ற நகைச்சுவை நடிகர்களில் ஒருவரான மயில்சாமி கடந்த மாதம் 19 ஆம் தேதி அதிகாலை திடீர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் திரை உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சென்னை சாலிகிராமத்தில் அவருடைய உடல் அஞ்சலிக்கு வைக்கப்பட்ட போது, பொதுமக்களும் திரையுலகினரும் பெருமளவில் வந்து அஞ்சலி செலுத்தினார்.

இந்நிலையில் மயில்சாமி ஏற்கனவே நடித்திருந்த அவரின் கடைசி படமான கிளாஸ்மேட்ஸ் திரைப்படம் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடல் ‘கண்ணு முன்னே’ தற்பொது வெளியாகியுள்ளது. இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்து வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்