தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'மாஸ்டர்' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்து விட்டது. விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ள இப்படத்தில் ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், ஷாந்தனு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்நிலையில் தற்போது இப்படத்தின் இணை எழுத்தாளர்களில் ஒருவரான பொன் பார்த்திபன் பேட்டி ஒன்றில் மாஸ்டர் படம் குறித்த ருசிகர தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார். அதவது, படத்தின் இயக்குனர் லோகேஷ் கங்கராஜ், நிஜ வாழ்க்கையில் தான் சந்தித்த கதாபாத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது தான் "மாஸ்டர்" என்று கூறியுள்ளார். வித்யாசமான கதாபாத்திரத்தில் விஜய் நடித்துள்ள இப்படத்தில் நிறைய ட்விஸ்ட் கொண்டிருப்பதாகவும் அவர் வெளிப்படையாக கூறியுள்ளார்.