வெளிநாட்டில் வித்யாசமான உடையில் நடிகர் விஜய் - தீயாய் பரவும் போட்டோ!

புதன், 13 மே 2020 (15:50 IST)
போர்வை அணிந்துகொண்டு வெளிநாட்டு நண்பர்களுடன் நடிகர் விஜய் எடுத்துக்கொண்ட போட்டோ இணையத்தில் வைரல்.

தமிழ் சினிமாவின் தலையாய நடிகரான தளபதி விஜய் சினிமா பின்னணி கொண்ட குடும்பத்தில் பிறந்து வளர்ந்தாலும் ஆரம்பம் காலத்தில் இருந்தே படி படியாக தனது அயராது உழைப்பாலும் விடா முயற்சியாலும் முன்னுக்கு வந்தவர். தமிழகம் மட்டுமல்லாது உலகம் முழுக்க உள்ள ஏராளமான சினிமா ரசிகர்களின் பேவரைட் நடிகராக வளர்ந்து நிற்கிறார்.

இன்று இவரை பற்றி ஏதேனும் சிறிய விஷயம் கசிந்தால் கூட அன்றைக்கு அது    தலைப்பு செய்தியாக பேசப்படும் அளவிற்கு அவர் உச்ச நடிகராக விளங்கி வருகிறார்.  இந்நிலையில் தளபதி விஜய் தனது நண்பர்களுடன் கடந்த 2014ல் வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்றபோது எடுத்த போட்டோவை விஜய்யின் நண்பரும் நடிகருமான சஞ்சீவ் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அந்த போட்டோவில் உள்ள அனைவரும் வித்தியாசமாக போர்வை மற்றும் தொப்பிகளை அணிந்து போஸ் கொடுத்துள்ளனர். இந்த போட்டோ தற்போது இணையத்தில் தீயாக பரவி செம வைரலாகி வருகிறது.

TB! During 2014 abroad Trip with gang... pic.twitter.com/VuWSNUH1vL

— Sanjeev (@SanjeeveVenkat) May 13, 2020

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்