தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'மாஸ்டர்' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்து விட்டது. விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ள இப்படத்தில் ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், ஷாந்தனு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்நிலையில், இப்படத்தின் வியாபாரம் ரூ.200 கோடிக்கும் தமிழக உரிமம்ரூ. 70 கோடிக்கும், வெளிநாட்டு உரிமம் ரூ. 30 கோடிக்கும் பிற மாநிலங்களின் உரிமம் ரூ. 25 கோடிக்கு ஆகியுள்ளதாக தகவல் வெளியாகிறது. ஆனால் வெளிநாட்டில் கொரோனா பீதி காரணமாக இப்படத்தின் வெளிநாட்டு உரிமையை வாங்கிய அதே நிறுவனம் திருப்பிக் கொடுத்துள்ளதாக தெரிகிறது.