கொரோனா நிதி உதவி... ரூ.75 லட்சம் வழங்கிய விஜய் டிவி!

வியாழன், 14 மே 2020 (16:01 IST)
விஜய் தொலைக்காட்சி நிறுவனம் தங்களது சேனனில் வேலை பார்த்து வந்த சீரியல் நடிகர், டெக்னீஷியன்ஸ், உதவியாட்கள் உள்ளிட்ட கொரோனா ஊரடங்கில் பாதிக்கப்பட்ட அத்தனை பேருக்கும் மொத்தமாக ரூ.75 லட்சம் வழங்கியுள்ளதாக சீரியல் தயாரிப்பாளர் ரமணகிரிவாசன் தனது முகநூலில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பதிவிட்டிருப்பதாவது,

கொரானா பிரச்சனையில் பாதிக்கப்பட்ட எத்தனையோ பணிகளில் ஒன்று தொலைக்காட்சி தொடர் மற்றும் நிகழ்ச்சிகள் தயாரிப்பு. புதிய தொடர்கள் நிகழ்சிகளை ஒளிபரப்ப முடியாமல் சேனல்கள் முடங்கி இருக்கின்றன. விளம்பர வருவாய் இன்றி சேனல்கள் நஷ்டத்தை சந்தித்து இருக்கின்றன. விஜய்டிவியின் தொடர்கள் மற்றும் நிகழ்ச்சிகளை நம்பி இருந்த பெப்சி யூனியனின் பல துறையை சேர்ந்த 750 பேர் ஏப்ரல் மாதம் முழுவதும் வேலை செய்ய செய்ய இயலாமல் போனது.அவர்கள் அனைவருமே தினசரி வருமானக்காரர்கள். அந்த 750 பேருக்கும்  ஏற்க்குறைய 75 லட்சரூபாயை விஜய்டிவி உதவி தொகையாக வழங்கி இருக்கிறது.

இது ஏறக்குறைய அவர்கள் ஏப்ரல் மாதம் முழுவதும் வேலை செய்து இருந்தால் என்ன வருமானம் கிடைத்திருக்குமோ அதற்க்கு சமமான தொகை என்றால் அது மிகை இல்லை. தயாரிப்பு நிறுவனங்கள் மூலமாக ஒவ்வொரு தொடரிலும் வேலை செய்யும் பணியாளர்களின் கணக்கை எடுத்து மொத்த தொகையை தயாரிப்பு நிறுவனங்களுக்கு வழங்கி அவர்கள் மூலமாக ஒவ்வொரு தொழிலாளிக்கும் அந்த பணம் போய் சேருகிறதா என்பதையும் விஜய் டிவி உறுதி செய்திருக்கிறது.

விஜய் டிவியில் இரண்டு தொலைக்காட்சி தொடர்களை தயாரித்து கொண்டிருப்பவன் நான். உதவி பெற்ற ஒவ்வொருவரும் அந்த பணத்தை நாங்கள் வழங்கியதாக எண்ணி தொலைபேசியில் எங்களுக்கு நன்றி சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில் அந்த நன்றி விஜய்டிவிக்கே போய் சேர வேண்டும். அவர்கள் இந்த உதவியை செய்ததை கூட விளம்பரப்படுத்திக் கொள்ளவில்லை. நன்றி எப்போதும் சரியான இடத்திற்கு போய் சேரவேண்டும் என்பதால் தான் இந்த பதிவு.

மனிதநேயத்துடன் இந்த மாபெரும் உதவியை செய்த விஜய்டிவிக்கு எனது மனமார்ந்த நன்றிகள். உங்கள் விஜய் டிவி என்பது வெறும் வார்த்தையாக இல்லாமல் பிரச்சனையான சூழலில் நிஜமாகவே தொழிலாளர்கள் பக்கம் நின்று எங்கள் விஜய் டிவியாக அனைவரது இதயத்திலும் உயர்ந்து நிற்கிறது விஜய் டிவி. இந்த மாபெரும் உதவிக்கு பின்னால் மறைந்து இருக்கும் மனிதநேயம் மிக்க விஜய் டிவியின் பொது மேலாளர் கிருஷ்ணன் குட்டி அவர்களுக்கும் சீனியர் வைஸ் பிரஸிடெண்ட் பாலசந்திரன் அவர்களுக்கும் தலைமை நிகழ்ச்சி பொறுப்பாளர் பிரதீப் மில்ராய் பீட்டர் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள். என்று ரமணகிரிவாசன் பதிவிட்டுள்ளார். இந்த கஷ்டமான சமயத்தில் தங்களுக்கு உதவி செய்த விஜய் டிவிக்கு பலரும் தங்கள் நன்றியை தெரிவித்து வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்