மாஸ்டர் படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் விலையை குறைக்க பேரம் பேசி வருவதாக சொல்லப்படுகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சேவியர் பிரிட்டோ தயாரிப்பில் உருவாகியுள்ள படம் மாஸ்டர். இப்படத்தில் விஜய், விஜய் சேதுபதி, ஆண்டிரியா, மாளவிகா மோகனன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்த படத்தின் மீது விஜய் ரசிகர்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருக்கின்றனர். கொரோனா லாக்டவுனுக்கு பின்னர் இந்த படம் பொங்கலுக்கு மிகப் பிரம்மாண்டமாக ரிலிஸாக உள்ளது.
இந்நிலையில் இந்த படத்தின் விநியோகஸ்தர்கள் மூலமாக இப்போது புதுப் பிரச்சனை தொடங்கியுள்ளது. அது என்னவென்றால் படத்தை ஏற்கனவே வாங்கிய தொகையை விட கம்மியான தொகைக்கு கேட்கிறார்களாம். ஆனால் மாஸ்டர் தயாரிப்பாளரோ மாஸ்டர் படம் 1000 திரையரங்குகளில் வெளியாக உள்ளதால் தொகையைக் குறைக்க மறுத்துள்ளாராம். இதனால் சில விநியோகஸ்தர்கள் பின்வாங்க சொந்த செலவில் அதை ரிலிஸ் செய்ய உள்ளாராம் லலித்.