'மாஸ் கடவுள்' நந்தமூரி பாலகிருஷ்ணா நடிக்கும் # BB4 - படத்திற்கு 'அகண்டா - 2 தாண்டவம்' என பெயரிடப்பட்டிருக்கிறது!

J.Durai
வியாழன், 17 அக்டோபர் 2024 (08:22 IST)
'மாஸ் கடவுள்'  நந்தமூரி பாலகிருஷ்ணா - பிளாக் பஸ்டர் ஹிட் இயக்குநர் பொயபட்டி ஸ்ரீனு - தயாரிப்பாளர்கள் ராம் அச்சந்தா & கோபி அச்சந்தா - 14  ரீல்ஸ் பிளஸ் - எம். தேஜஸ்வினி நந்தமூரி - கூட்டணியில் தயாராகும் #BB4  எனும் படத்திற்கு 'அகண்டா 2- தாண்டவம் ' என பெயரிடப்பட்டு , அதன் தொடக்க விழா  பிரம்மாண்டமாக நடைபெற்றது. 
 
 'மாஸ் கடவுள்' நந்தமூரி பாலகிருஷ்ணா மற்றும் பிளாக் பஸ்டர் ஹிட் இயக்குநர் பொயபட்டி ஸ்ரீனு ஆகியோரின் கூட்டணியில் நான்காவது முறையாக உருவாகும் படத்திற்கு, #BB4 அகண்டா 2 தாண்டவம் பெயரிடப்பட்டுள்ளது. மேலும் இது அவர்களின் பரபரப்பான பிளாக்பஸ்டர் அகண்டா திரைப்படத்தின்  தொடர்ச்சியாக உருவாகிறது. ராம் அச்சந்தா மற்றும் கோபிசந்த் அச்சந்தா ஆகியோர் 14 ரீல்ஸ் பிளஸ் பேனரில் படத்தைத் தயாரிக்கின்றனர், அதே நேரத்தில் எம் தேஜஸ்வினி நந்தமுரி இந்த பான் இந்தியா திரைப்படத்தை வழங்குகிறார்.
 
படக்குழு மற்றும் முக்கிய விருந்தினர்கள் முன்னிலையில் அகண்டா 2 இன்று சிறப்பாக தொடங்கப்பட்டது. முஹூர்த்தம் ஷாட்டுக்கு, தேஜஸ்வினி கேமராவை சுவிட்ச் ஆன் செய்ய, பிராமணி கிளாப்போர்டு அடித்தார். முஹூர்த்தம் ஷாட்டுக்கு பாலகிருஷ்ணா ஒரு பவர்ஃபுல் டயலாக்கைச் சொன்னார்.
 
அகண்டாவில் கதாநாயகியாக நடித்த பிரக்யா ஜெய்ஸ்வால் இப்படத்திலும் பங்கேற்கிறார்.  மேலும் அவர் பிரமாண்ட துவக்க விழாவிலும் கலந்து கொண்டார்.
 
நந்தமுரி ராமகிருஷ்ணா அகண்டா 2 டைட்டில் தீமை  வெளியிட்டார், இது கதையில் பிணைக்கப்பட்ட ஆன்மீக கூறுகளை வெளிப்படுத்தும் அதே நேரம்,  எஸ் தமனின் அற்புதமான ஸ்கோர் உண்மையிலேயே தனித்து நிற்கிறது, இந்த தீம்  படத்தின் பிரம்மாண்டத்தை எடுத்துக்காட்டுகிறது. 
 
நந்தமூரி பால கிருஷ்ணாவை மாஸாக  திரையில் காட்சிப்படுத்துவதில் பொயபட்டி ஸ்ரீனு தனித்துவமான திறமை மிக்கவர். அதிலும் நந்தமூரி பாலகிருஷ்ணாவை மாஸ் மகாராஜாவாக  காட்சிப்படுத்தும் வகையில், ஐன்  சக்தி வாய்ந்த திரைக்கதையை அவர் எழுதியிருக்கிறார். இத்திரைப்படத்தில் திறமையான தொழில்நுட்பக் கலைஞர்கள் பங்கேற்றுள்ளனர். ஸ்ரீ ராம் பிரசாத் மற்றும் சந்தோஷ் டி டெடகே ஆகிய இருவரும் இணைந்து ஒளிப்பதிவு செய்கிறார்கள். ஏ. எஸ். பிரகாஷ் கலை இயக்குநராகவும், தம்மி ராஜு பட தொகுப்பாளராகவும் பணியாற்றுகிறார்கள்.  'அகண்டா' படத்தின் முதல் பாகத்திற்கு இசையமைத்த எஸ். தமன் அதன் இரண்டாம் பாகத்திற்கும் இசையமைக்கிறார்.
 
இந்திய சினிமாவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் இதுவும் ஒன்றாகும், ஒவ்வொரு திரைப்பட ரசிகரும் இந்த பரபரப்பான கூட்டணியின் வருகைக்காக ஆவலுடன் காத்திருக்கிறார்கள். அகண்டா 2 க்கான படப்பிடிப்பு விரைவில் தொடங்கும், மேலும் இந்த அகண்டா படத்தின் இரண்டாம் பாகத்திற்கான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்