வட மாநில தேர்தலின்போது, தமிழர்களுக்கு எதிராக பேசுவது பாஜகவின் வழக்கம்.. கனிமொழி

Mahendran

வெள்ளி, 31 அக்டோபர் 2025 (14:54 IST)
பீகாரில் பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், "தமிழகத்தில் உழைக்கும் பீகார் மக்களை திமுகவினர் துன்புறுத்துகின்றனர்" என்று குற்றம் சாட்டினார். இந்த குற்றச்சாட்டுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்ததை தொடர்ந்து, திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி பதிலளித்துள்ளார்.
 
வட மாநிலத் தேர்தலின்போது, தமிழர்களுக்கு எதிராக வெறுப்பு அரசியலைத் தூண்டுவது பாஜகவின் வழக்கம் என்று கனிமொழி கூறினார்.
 
"தமிழ்நாட்டில் கடந்த நான்கு ஆண்டுகளாகத் தனது அரசியலை செய்ய முடியாமல் துன்பப்படும் பீகாரை சேர்ந்த ஒருவர் ராஜ்பவனில் மட்டுமே வசிக்கிறார்" என்று கனிமொழி மறைமுகமாகத் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியைச் சாடியுள்ளார்.
 
அடுத்த தேர்தல் பிரசாரத்திற்கு பிரதமர் தமிழகம் வரும்போது, வெளிமாநில தொழிலாளர்களே தமிழகத்தின் உண்மையான நிலையை விளக்குவார்கள் என்றும் அவர் சவால் விடுத்துள்ளார்.
 
பிரதமரின் பேச்சும், ஆளுநரை சுட்டிக்காட்டி கனிமொழி அளித்த பதிலடியும் தமிழக அரசியலில் விவாத பொருளாக மாறியுள்ளன.

Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்