இப்படி கத்திக்கிட்டே இருந்தா.. யாரு ஷோ பாப்பாங்க? - பிக்பாஸ் வீட்டாரை கிழித்தெடுத்த விஜய் சேதுபதி!

Prasanth K

சனி, 1 நவம்பர் 2025 (15:50 IST)

பிக்பாஸ் 9வது சீசன் தொடங்கியது முதலே கூச்சல், குழப்பம் மட்டுமே நிலவி வரும் நிலையில் இந்த வாரம் ஸ்பீக்கரோடு களம் இறங்கியுள்ளார் விஜய் சேதுபதி.

 

பிக்பாஸ் சீசன் தொடங்கி 4 வாரங்கள் ஆகிவிட்ட நிலையில் ஷோ மீது ஆர்வத்தை ஏற்படுத்தும் விதமாக எந்த சம்பவமும் நடந்ததாக தெரியவில்லை. அதுமேற்கொண்டு தினசரி விஜே பாரு, திவாகர், ரம்யா ஜோ என ஒருவர் மாறி ஒருவர் கத்திக் கொண்டே இருக்கின்றனர். இரண்டு பேருக்கு நடுவே சண்டை என்றால் கூட அங்கும் கும்பலாக சேர்ந்துக் கொண்டு எல்லாரும் கத்துவதால் யார் என்ன பேசுகிறார்கள் என்றும் புரியாமல், ஆடியன்ஸ் தலைவலிக்கு உள்ளாகின்றனர்.

 

மற்ற எந்த பிக்பாஸ் ஷோவை விடவும் இந்த சீசனில் இது தொல்லையாக மாறியுள்ளது. இதனால் கடுப்பான விஜய் சேதுபதி இந்த வார இறுதியில் கையில் ஒலிப்பெருக்கி ஒன்றோடு வந்து சத்தமாக கத்துகிறார். அவர்கள் கத்துவது ஆடியன்ஸுக்கு எவ்வளவு எரிச்சலை ஏற்படுத்துகிறது என்பதை காட்ட விஜய் சேதுபதி எடுத்துள்ள இந்த ஆக்‌ஷன் பலனளிக்குமா என்பதை அடுத்த வாரம்தான் பார்க்க வேண்டும்.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்