தனது எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், "அபத்தமான செயற்கை நுண்ணறிவு விடியோக்கள் மிகைப்படுத்தப்பட்டு, பார்ப்பதற்கு உண்மை போல் காட்சியளிப்பது மிகவும் மோசமானது. இந்த ஆபத்தான போக்கு தொடர்ந்து நீடித்தால், அது நமது எதிர்காலத்திற்கு பெரும் அச்சுறுத்தலாகவும் மாறிவிடும்" என்று எச்சரித்தார்.
 
									
				
	 
	சமீபகாலமாக, பிரபலங்களின் உருவம் மற்றும் குரலை பயன்படுத்தித் தவறான தகவல்களைப் பரப்பும் 'டீப்ஃபேக்' விடியோக்கள் அதிகரித்து வரும் நிலையில், நிவேதாவின் இந்தக் கருத்து, திரையுலகம் இந்தத் தொழில்நுட்பத்தால் சந்திக்கும் அச்சுறுத்தலை சுட்டிக்காட்டுகிறது.
 
									
				
	 
	 'ஒருநாள் கூத்து', 'டிக் டிக் டிக்' போன்ற படங்களில் நடித்துள்ள நிவேதா, சமூக ஊடகங்களில் இந்த விவகாரத்தின் அபாயத்தை வலியுறுத்தியுள்ளார்.