உதயநிதி ஸ்டாலின் மகன் இன்பநிதி நடிகராக அறிமுகமாகும் முதல் படத்தை மாரி செல்வராஜ் இயக்க உள்ளது உறுதியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் பரியேறும் பெருமாள் தொடங்கி வாழை வரை தென் தமிழக மண் சார்ந்த படங்களை இயக்கி தனி முத்திரை பதித்துள்ளவர் மாரி செல்வராஜ். தற்போது இவர் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள பைசன் படம் வெளியாக உள்ளது.
அதை தொடர்ந்து நடிகரும் துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலினின் மகன் இன்பன் உதயநிதியை ஹீரோவாக வைத்து மாரி செல்வராஜ் ஒரு படத்தை இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியானது. இதுகுறித்து சமீபத்தில் பேசிய மாரி செல்வராஜ், பைசன் படத்திற்கு பிறகு தனுஷுடன் ஒரு படம் இணைவதாகவும், அது முடிந்த பிறகு இன்பநிதி மற்றும் கார்த்தி நடிக்கும் ஒரு படத்தை இயக்க உள்ளதாக கூறியுள்ளார்.
Edit by Prasanth.K