பரியேறும் பெருமாள், கர்ணன் மற்றும் மாமன்னன் ஆகிய படங்களை இயக்கிய மாரி செல்வராஜ் தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு பாணியை உருவாக்கி வைத்துள்ளார். தற்போது வாழை என்றொரு படத்தை இயக்கி வரும் அவர் இயக்கத்தில் அடுத்து துருவ் விக்ரம் நடிக்கவிருக்கும் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. இந்த படத்தில் துருவ் விக்ரம் கபடி வீரராக நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதற்காக அவர் கபடி பயிற்சியெல்லாம் எடுத்தார்.