இந்த நிலையில், துக்ளக் ஜாமீன் மனு கோரி அம்பத்தூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த நிலையில், அந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், தன்னிடம் இருந்து போதைப் பொருள் எதுவும் கைப்பற்றப்படாத நிலையில் தன்னை கைது செய்ததாகவும், இந்த வழக்கில் தனக்கு எந்தவித தொடர்பும் இல்லை என்றும், தனக்கு ஜாமீன் வழங்கினால் நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளை ஏற்கத் தயாராக இருப்பதாகவும் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு தொடர்பாக காவல்துறை வாதம் செய்த நிலையில், அந்த வாதத்தை ஏற்ற நீதிபதி, ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்வதாக உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.