குடிக்காமல் ஒருநாளும் இருக்கமுடியாது - மனிஷா கொய்ராலா ஓபன் டாக்!

Webdunia
வியாழன், 3 ஜனவரி 2019 (17:33 IST)
பாலிவுட் நடிகை மனீஷா கொய்ராலா பம்பாய் படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார். அதன் பிறகு இந்தியன், முதல்வன், ஆளவந்தான், பாபா, மும்பை எக்ஸ்பிரஸ் படங்களில் நடித்தார். தமிழில் அவர் நடித்த படங்கள் அனைத்தும் பெரிய நடிகர்கள் நடித்தது, பெரிய இயக்குனர்கள் இயக்கியது.


 
இவர்  ”ஹீலர்” எனக்கு மறுவாழ்வு தந்த கேன்சர்' என்ற தலைப்பில் தனது சுயசரிதையை எழுதியுள்ளார். பெங்குவின் பதிப்பகம் வெளியிட்டுள்ள இப்புத்தகத்தில் கொஞ்சமும் தயங்காமல் தன் வாழ்வு குறித்த பல உண்மைகளை புட்டுப்புட்டு வைத்துள்ளார்.
 
நேபாள் மன்னர் பரம்பரையைச் சேர்ந்தவரான மனீஷா தனது 19 வயதில் இந்தி சினிமாவில் அறிமுகமானார்.  2012ம் ஆண்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனீஷா கொய்ராலா சில ஆண்டுகள் சினிமாவில் இருந்து விலகி இருந்தார். அதற்காக அமெரிக்காவில் சிகிச்சை பெற்று பூரண குணமடைந்த அவர் அதிலிருந்து மீண்டு வந்து மீண்டும் நடிக்க ஆரம்பித்தார். 
 
பின்னர் மாப்பிள்ளை படத்தின் மூலம் ரீ-என்ட்ரி ஆனார். அதில் அவர் வில்லியாக நடித்தார். அதன் பிறகு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மெல்லிய கோடு என்ற படத்தில் நடித்தார்.
 
தன்  கசப்பான கடந்தகால நினைவுகளை பகிர்ந்துகொண்ட அவர் கூறியதாவது,  ‘என்னைப் பொருத்தவரை கேன்சர் எனக்குக் கிடைத்த வரம் என்றுதான் சொல்வேன். ஏனெனில் வாழ்க்கை குறித்த புரிதல்களையும், புதிய அனுபவங்களையும் எனக்கு அந்த நோய் கற்றுக்கொடுத்தது. 


 
நான் வாழ்வின் உச்சத்தில் இருந்தபோது பெருங்குடிகாரியாக மாறி ஆடினேன். குடிக்காமல் ஒரு நாள் கூட என்னால் இருக்கமுடியாது. ஒன்று என் வீட்டில் பார்ட்டி நடக்கும். அல்லது பார்ட்டி நடத்தும் ஒருவர் வீட்டில் நான் இருப்பேன் என்கிற அளவுக்கு போதைக்கு அடிமையாகிவிட்டேன். 
 
அதற்கு முடிவுகட்ட, எனக்குப் பாடம் கற்றுக்கொடுக்கும் பரிசாகவே கேன்சர் வந்தது என்று எடுத்துக்கொண்டேன். என் சிந்தனை கூர்மையானது, என் மனம் தெளிவானது, என் கண்ணோட்டம் மாறியது.  முன்பெல்லாம் அதிகம் கோபமாக, பதற்றமாகவே இருப்பேன். ஆனால் அதிலிருந்து மீண்டு, தற்போது முற்றிலும் அமைதியாக உள்ளேன்” இப்போது நான் முற்றிலும் துறந்த புது மனுஷி’ என்று அந்தப் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார் மனிஷா கொய்ராலா. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்