கமல்ஹாசன், சிம்பு, த்ரிஷா நடிப்பில், மணிரத்னம் இயக்கத்தில், ஏ.ஆர். ரஹ்மான் இசையில் உருவான தக்லைஃப் திரைப்படம் அடுத்த மாதம் ஐந்தாம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. இந்த படம் குறித்த பல்வேறு புதிய தகவல்கள் அவ்வப்போது வெளியாகி, ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி வருகிறது.
இந்த நிலையில், சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டிரைலரில், கமல் மற்றும் த்ரிஷா நெருக்கமாக இருப்பது போன்ற காட்சி ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்த படத்தின் ஆரம்பத்தில் இருந்தே, சிம்புவுக்கு ஜோடியாகத் தான் த்ரிஷா நடிக்கிறார் என்று கூறப்பட்ட நிலையில், கமல்ஹாசனுக்கு அபிராமிதான் ஜோடி என்றும் கூறப்பட்டது.
திடீரென, கமல்–த்ரிஷா நெருக்கமாக இருக்கும் காட்சிகளை மணிரத்னம் டிரைலரில் வைத்து, "ட்விஸ்ட்" ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
கமல்ஹாசனுக்கு, த்ரிஷா இரண்டாவது ஹீரோயின் என்ற ஒரு பிம்பத்தை டிரெய்லர் மூலம் ஏற்படுத்தி, பின்னர் படம் பார்ப்பவர்களுக்கு திடீரென சிம்புவுக்குத்தான் த்ரிஷா ஜோடி என்று எண்ண வைப்பதுதான் மணிரத்னத்தின் ட்விஸ்ட் என்றும், டிரைலரில் இருந்த கமல்–த்ரிஷா காட்சிகள் படத்தில் இருக்காது என்றும் நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.