என் படங்களை நானே பார்ப்பதில்லை… இயக்குனர் மணிரத்னம் பகிர்ந்த சுவாரஸ்யம்!

திங்கள், 12 ஜூலை 2021 (11:06 IST)
இயக்குனர் மணிரத்னம் தனது படங்கள் முடிந்த பின்னர் அதைப் பார்ப்பதில்லை என கூறியுள்ளார்.

9 பிரபல நடிகர்கள் மற்றும் 9 பிரபல இயக்குனர்கள் உருவாக்கும் ’நவரசா’ என்ற ஆந்தாலஜி வெப்தொடர் வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாக இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளது நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாக இருக்கும் இந்தத் தொடரை மணிரத்னம் தயாரித்து உள்ளார் என்பதும் இந்த தொடரின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்ற நிலையில் தற்போது இந்த ஆந்தாலஜி படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது.

இந்த படத்துக்கான ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வரும் மணிரத்னம் பல விஷயங்களைப் பகிர்ந்துகொண்டுள்ளார். அதில் ‘என் படங்கள் முடிந்த பின்னர் அதை நான் பார்ப்பதே இல்லை. அப்படி பார்த்தால் அதில் இருக்கும் தவறுகள்தான் கண்ணுக்குத் தெரியும்.. அதனால் எதற்கு அதைப் பார்ப்பது?’ என்று கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்