நவரசா ஆந்தாலஜி… சம்பளம் வாங்காமல் பணிபுரிந்த கலைஞர்கள்!

சனி, 10 ஜூலை 2021 (16:30 IST)
மணிரத்னம் தயாரிப்பில் உருவாகி வரும் நவரசா ஆந்தாலஜியில் பணிபுரிந்த முன்னணி கலைஞர்கள் யாருமே சம்பளம் வாங்கிக் கொள்ளாமல் பணிபுரிந்ததாக மணிரத்னம் தெரிவித்துள்ளார்.

9 பிரபல நடிகர்கள் மற்றும் 9 பிரபல இயக்குனர்கள் உருவாக்கும் ’நவரசா’ என்ற ஆந்தாலஜி வெப்தொடர் வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாக இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளது நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாக இருக்கும் இந்தத் தொடரை மணிரத்னம் தயாரித்து உள்ளார் என்பதும் இந்த தொடரின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்ற நிலையில் தற்போது இந்த ஆந்தாலஜி படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது.

கொரோனா கால ஊரடங்கால் பாதிக்கப்பட்ட சினிமா தொழிலாளர்களுக்கு உதவும் விதமாக இந்த படைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் இதில் பணிபுரிந்த முன்னணிக் கலைஞர்கள் யாருமே சம்பளம் வாங்கிக்கொள்ளாமல் பணிபுரிந்ததாக இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் மணிரத்னம் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்