''மாமனிதன்'' படத்தின் ஓடிடி ரிலீஸ் ..இயக்குனர் முக்கிய தகவல்!

Webdunia
புதன், 6 ஜூலை 2022 (22:53 IST)
விஜய்சேதுபதி – சீனுராமசாமி  கூட்டணியில் தென் மேற்குப்பருவக்காற்று, இடம் பொருள் ஏவல் மற்றும் தர்மதுரை ஆகியப் படங்களுக்கு அடுத்து மாமனிதன் படம் உருவாகியுள்ளது. 2018 ஆம் ஆண்டு இறுதியில் தொடங்கப்பட்ட படத்தின் படப்பிடிப்பு 2019 ஆம் ஆண்டே முடிந்தது. இந்த படத்தைத் தயாரித்துள்ள யுவன் ஷங்கர் ராஜா மற்றும் இயக்குனர் சீனு ராமசாமிக்கு இடையே சில கருத்து வேறுபாடுகள் எழுந்தது.

இந்த படத்தின் தமிழக மற்றும் கேரள திரையரங்க விநியோக உரிமையை முன்னணி தயாரிப்பாளரும் நடிகருமான ஆர் கே சுரேஷ் வாங்கியுள்ளார். சில முறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டும் பின்னர் மாற்றப்பட்டது. கடைசியாக ஜூன் 24 அம் தேதி ‘மாமனிதன்’ திரைப்படம் ரிலீஸ் ஆகி, ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வருகிறது.

இந்நிலையில் படத்துக்குக் கிடைத்துள்ள வரவேற்பை அடுத்து தற்போது படத்தின் ஓடிடி மற்றும் சேட்டிலைட் உரிமைகள் விற்பனை ஆகியுள்ளன. ஆஹா ஓடிடி நிறுவனமும், ஜி தமிழ் தொலைக்காட்சியும் இந்த உரிமைகளைக் கைப்பற்றியுள்ளது.

எனவே இப்படத்தை விரையில் ஆஹா இணையவழியில் சந்திக்கலாம் என இயக்குனர் சீனு ராமசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனத்  டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: சீனுராமசாமி – விஜய் சேதுப#மாமனிதன் திரைப்படத்தை ஆஹா இணையவழியில் விரைவில் சந்திக்கலாம்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்