இதில், இந்துக் கடவுளை அவமதிக்கும் வகையில், போஸ்டர் இருப்பதாக கூறி பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்து மத உணர்வுகளைபுண்படுத்தியதாகக் கூறி, லீனா மணிமேகலை மீது 153 A மற்றும் 295 A ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
டொரோண்டாவில் உள்ள ஆகா கான் அருங்காட்சியகம் இந்திய தூதரகம் அறிவுறுத்தலின்படி, காளி ஆவணப் படைப்பை நீக்கி அறிவிப்பை வெளியிட்டுள்ளது, அத்துடன், லீனா மணிமேகலை வெளியிட்ட காளி ஆவணப்பட போஸ்டர் சமூகவலைதளப் பக்கத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.