விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள மாமனிதன் படத்தின் 2வது சிங்கில் இன்று வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் தென்மேற்குப் பருவக்காற்று என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனவர் சீனுராமசாமி. இவர் கண்ணே கலைமானே, தர்மதுறை, நீர்ப்பறவை உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார்.
இவர் அடுத்து இயக்கியுள்ள படம் மாமனிதன். இப்படத்தில் விஜய் சேதுபதி ஹிரோவாக நடித்திருக்கிறார். இந்த வருடத்தில் மிகவும் எதிர்ப்பர்க்கப்படும் படங்களில் இதுவும் ஒன்று.
இப்படத்தை இசையமைப்பாளர் இளையராஜா மற்றும் யுவன்சங்கர்ராஜா ஆகிய இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்திற்கு யுவன் சங்கரா ராஜா இசையமைத்திருக்கிறார்.
இந்நிலையில் இப்படத்தின் இயக்குநர் சமீபத்தில் மாமனிதன் படத்தின் முதல் பார்வை, வெளியாகி வரவேற்பைப் பெற்றது.
இதையடுத்து, மாமனிதன் பட முதல் சிங்கிலை இயக்குநர் சீனுராமசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார். இது வைரலானது.
இந்நிலையில் இப்படத்தின் அடுத்த முக்கிய அப்டேட்டை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.
அதில், மாமனிதன் படத்தில் 2 வது சிங்கில் ஏ ராசா என்ற பாடல் இன்று காலை 11:30 க்கு வெளியிடப்படும் எனத் தெரிவித்தார். அதன்படி இப்பாடல் இன்று யுவன் சங்கர் ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார். இப்பாடல் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
மேலும், இப்பாடலை கவிஞர் பா. விஜய் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.
I hope this song will serve as a much needed pill of HOPE