விஜய்க்கு ஜோடியான மாளவிகா மோகனன் ! – விஜய் 64 அப்டேட் !

Webdunia
புதன், 18 செப்டம்பர் 2019 (15:02 IST)
பிகில் படத்துக்கு பிறகு விஜய் நடிக்கும் 64 ஆவது படத்தில் அவருக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்க இருக்கிறார்.

விஜய் இப்போது தனது நடிப்பில் உருவாகியுள்ள பிகில் படத்தை முடித்துவிட்டு அடுத்ததாக மாநகரம் புகழ் லோகேஷ் கனகராஜ் இயக்கும் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக கியாரா அத்வானி, ராஷ்மிகா மந்தனா மற்றும் ராஷி கண்ணா ஆகியோரின் பெயர் அடிபட்டது.

ஆனால் இப்போது அதையெல்லாம் பொய்யாக்கும் விதமாக மாளவிகா மோகனன் நாயகியாக ஒப்பந்தம் ஆகியுள்ளார். இவர் ஈரானிய இயக்குனர் மஜித் மஜிது இயக்கத்தில் நடித்த பியாண்ட் தெ க்ளவுட்ஸ் படத்தின் மூலம் சர்வதேசக் கவனம் பெற்றார்.

மேலும் இந்த படத்தில் வில்லனாக நடிப்பதற்கு விஜய் சேதுபதியிடமும் பேச்சுவார்த்தை நடைபெறுவதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்