தங்கலான் படத்துக்காக உடல் எடையைக் குறைத்த மாளவிகா மோகனன்!

Webdunia
சனி, 29 ஏப்ரல் 2023 (14:54 IST)
தமிழில் மாஸ்டர், பேட்ட மற்றும் மாறன் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார் மாளவிகா மோகனன். கடைசியாக  அவர் நடித்த மாறன் திரைப்படம் தோல்வி படமாக அமைந்தது. இதையடுத்து இப்போது அவர் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் தங்கலான் படத்தில் நடித்து வருகிறார். நடிப்பில் மாளவிகாவுக்குக் கிடைத்த ரசிகர்களை விட, அவரின் புகைப்படங்கள் மூலமாக கிடைத்த ரசிகர்கள்தான் அதிகம். இன்ஸ்டாகிராமில் அவர் பகிரும் புகைப்படங்கள் ஆயிரக்கணக்கில் லைக்ஸ்களைக் குவித்து வருகின்றன.

இந்நிலையில் சமீபத்தில் அவர் பகிர்ந்த புகைப்படத்தில் உடல் எடை குறைந்து மிகவும் ஒல்லியாக காணப்பட்டார். இதுபற்றி ரசிகர் ஒருவர் சமூகவலைதளத்தில் கேட்ட போது “தங்கலான் படத்துக்காக ஒல்லியான தோற்றத்தை இயக்குனர் விரும்பினார். அதற்காக பிரியாணி உள்ளிட்ட உணவுகளை சாப்பிடாமல் உடல் பயிற்சி செய்து எடையைக் குறைத்தேன்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்