ராஜமெளலி இயக்கத்தில் மகேஷ் பாபு?

Webdunia
செவ்வாய், 26 செப்டம்பர் 2017 (18:42 IST)
‘பாகுபலி’ புகழ் ராஜமெளலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கிறார் என்ற தகவல் கிடைத்துள்ளது.


 

 
‘பாகுபலி’யின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, ராஜமெளலி அடுத்து யாரை இயக்கப் போகிறார் என்பதுதான் சிதம்பர ரகசியமாக இருந்தது. டோலிவுட்டின் முன்னணி ஹீரோக்கள் தொடங்கி, ரஜினி, விஜய் என கோலிவுட் ஹீரோக்களின் பெயர்கள் அடிபட்டன. ஆனால், இன்னார்தான் என இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரவில்லை.

இந்நிலையில், அடுத்து மகேஷ் பாபுவை வைத்துத்தான் ராஜமெளலி இயக்கப் போகிறார் என நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் கிடைத்துள்ளது. தற்போது கொரட்டலா சிவா இயக்கும் ‘பரத் அனே நானு’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் மகேஷ் பாபு, அடுத்ததாக வம்சி இயக்கத்தில் நடிக்கிறார். அது முடிந்ததும், அடுத்த வருடத்தின் இறுதியில் ராஜமெளலிக்கு கால்ஷீட் கொடுத்திருக்கிறார் என்கிறார்கள். மகேஷ் பாபு நடித்துள்ள ‘ஸ்பைடர்’ படம் நாளை ரிலீஸாகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்