ஆக்‌ஷன் இருக்கி.. ரொமான்ஸ் இருக்கி… செண்ட்டிமெண்ட் இருக்கி… மாஸ் மசாலாவா குண்டூர் காரம் டிரைலர் ரிலீஸ்!

vinoth
திங்கள், 8 ஜனவரி 2024 (10:25 IST)
மகேஷ் பாபு நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் சர்காரு வாரிபட்டா. இந்த படம் சரியாக போகாத நிலையில் இப்போது குண்டூர் காரம் என்ற படத்தில் மகேஷ் பாபு நடித்து வருகிறார். இந்த படத்தை அலா வைகுந்தபுரம்லூ படத்தை இயக்கிய திரிவிக்ரம் இயக்கி வருகிறார். தமன் இசையமைக்க, மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார்.

ஸ்ரீலீலா, பிரகாஷ் ராஜ் மற்றும் ஜெயராம் ஆகியோர் மற்ற முக்கிய வேடங்களில் நடிக்க, இந்த படம் ஜனவரி 12 ஆம் தேதி சங்கராந்தியை முன்னிட்டு ரிலீஸ் ஆகவுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது. வழக்கமான மகேஷ் பாபு படம் போலவே ஆக்‌ஷன், ரொமான்ஸ் மற்றும் செண்ட்டிமெண்ட் எனக் கலந்துகட்டி ஒரு மாஸ் மசாலா படமாக குண்டூர் காரம் உருவாகியுள்ளதை இந்த டிரைலர் கோடிட்டு காட்டுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்