என்னது மீண்டும் அஸர்பைஜான் போகணுமா?... லைகாவுக்கு அதிர்ச்சி கொடுத்த மகிழ் திருமேனி!

vinoth
திங்கள், 12 ஆகஸ்ட் 2024 (16:32 IST)
அஜித், இப்போது மகிழ் திருமேனி இயக்கும் விடாமுயற்சி மற்றும் ஆதிக் இயக்கும் ‘குட் பேட் அக்லி’ஆகிய திரைப்படங்களில்  நடித்து  வருகிறார். விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் சில மாதங்களாக லைகா நிறுவனத்தின் பொருளாதார பிரச்சனை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் கடந்த மாதம் மீண்டும் அஜர்பைஜானில் தொடங்கி முடிந்தது.

இப்போது இறுதிகட்ட ஷூட்டிங் ஐதராபாத்தில் நடந்து வருகிறது. இதோடு மொத்த ஷூட்டிங்கும் முடியவுள்ளதாக சொல்லப்பட்டது. ஆனால் இப்போது மீண்டும் அஸர்பைஜானுக்கு ஒருவாரம் ஷூட்டிங் செல்ல வேண்டும் என இயக்குனர் மகிழ் திருமேனி கூறியுள்ளாராம்.

ஒரு ப்ரமோஷன் பாடல் மற்றும் சில காட்சிகளைப் படமாக்க வேண்டும் என அவர் தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனத்திடம் கூறியுள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்கு லைகா நிறுவனம் ஒத்துக் கொள்ளுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்