நடிகர் சல்மான்கானை கொலை செய்ய 20 லட்சம் கூலிப்படைக்கு வழங்கப்பட்டதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
லாரன்ஸ் என்ற மாஃபியா தொடர்ந்து சல்மான்கானுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும், தன்னுடைய அடியாட்களை அனுப்பி கொலை முயற்சி செய்ததாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே சல்மான் கானை கொலை செய்ய லாரன்ஸ் குழு தீட்டிய சதி திட்டம் முறியடிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த சம்பவத்தில் ஆறு பேர் சதி திட்டத்தில் ஈடுபட்டதாக விசாரணையில் தெரியவந்தது.
சல்மான் கான் நடமாட்டத்தை கண்காணிப்பது மற்றும் ரகசிய தகவல் தருவது ஆகியவற்றில் லாரன்ஸ் என்ற மாஃபியாவின் குழுவினர் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. தற்போது தற்போது லாரன்ஸ் , குஜராத் சிறையில் இருக்கும் இருப்பதாகவும் அவருடைய கூட்டாளிகள் தலைமறைவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
சல்மான் கானை கொலை செய்ய லாரன்ஸ் கூலிப்படைக்கு இருபது லட்ச ரூபாய் கொடுத்து உத்தரவிட்டுள்ளதாக அரசு தரப்பு வழக்கறிஞர் இன்று நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். மேலும் கடந்த ஏப்ரல் மாதம் சல்மான்கான் வீட்டில் நடந்த துப்பாக்கி சூடு நடத்தியதும் லாரன்ஸ் ஆட்கள் தான் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
இந்த வழக்கில் பெரும்பாலானோர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் சமீபத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து உள்ளதாகவும் நீதிமன்றத்தில் அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.