தமிழ் சினிமாவுக்கு சர்வதேச தரத்தில் இயக்குனர் கிடைத்துள்ளார் – ராயன் படத்தைப் புகழ்ந்த ராகவா லாரன்ஸ்!

vinoth

திங்கள், 29 ஜூலை 2024 (11:40 IST)
நடிகர் தனுஷ் நடித்து, இயக்கியுள்ள அவரின் 50 ஆவது படமான ராயன் கடந்த வாரம் வெளியான நிலையில் நிலையில் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்துகொண்டிருக்கின்றன. படத்தில் தனுஷோடு சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், எஸ் ஜே சூர்யா மற்றும் துஷாரா விஜயன் ஆகியோர் நடித்துள்ளனர்.

படம் வெளியாகி முதல் நாளில் உலகளவில் முதல் நாளில் 12.5 கோடி ரூபாய் அளவுக்கு வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது வழக்கமாக தனுஷ் படங்கள் செய்யும் கலெக்‌ஷனை விட அதிகம்.

இந்நிலையில் திரைத்துறையில் இருந்து இப்போது ராயன் படத்துக்குப் பாராட்டுகள் கிடைத்த வண்ணம் உள்ளன. படம் பார்த்துள்ள இயக்குனர் மற்றும் நடிகர் ராகவா லாரன்ஸ் “ராயன் படம் பார்த்தேன். தனுஷ் மிகச்சிறப்பாக இயக்கி நடித்துள்ளார். சகோதரர் எஸ் ஜே சூர்யா தனித்துவமான நடிப்பைக் கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவுக்கு சர்வதேச தரத்திலான ஒரு இயக்குனர் கிடைத்துள்ளார்” என பாராட்டியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்