புதிய ஓடிடி நிறுவனத்தை ஆரம்பிக்கும் மதுரை அன்புச் செழியன்?

vinoth
புதன், 21 பிப்ரவரி 2024 (08:13 IST)
தமிழ் சினிமாவில் பைனான்சியராக, தயாரிப்பாளராக முன்னணியில் இருப்பவர்  மதுரை அன்புச்செழியன்.  தமிழ் சினிமாவில் தயாராகும் மிகப்பெரிய பட்ஜெட் படங்களுக்கும் அவரிடம்தான் பைனான்ஸ் பெறுகிறார்கள். சமீபகாலமாக அவர் சினிமாவில் இருந்து விலகி இருப்பதாக ஒரு தோற்றம் உள்ளது.

இந்நிலையில் அவர் இப்போது புதிதாக ஒரு ஓடிடியை தொடங்குவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருவதாக சொல்லப்படுகிறது. அதற்கான ஆரம்பகட்ட வேலைகள் நடந்து வருவதாக தெரிகிறது.

உலகளவில் திரையரங்குகளுக்கு சற்றேறக்குறைய இணையாக ஓடிடிகள் வியாபாரம் செய்கின்றன. நெட்பிளிக்ஸ், அமேசான் ப்ரைம் போன்ற சர்வதேச ஓடிடிகளுக்கு மத்தியில் ஆஹா , சன் நெக்ஸ்ட் போன்ற பிராந்திய ஓடிடிகளும் போட்டியில் உள்ளன. அந்த வகையில் தமிழில் மற்றொரு முன்னணி ஓடிடியாக மதுரை அன்புச் செழியனின் முயற்சி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்