மோகன் லாலின் மலைக்கோட்டை வாலிபன் திரைப்பட ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

vinoth

செவ்வாய், 20 பிப்ரவரி 2024 (11:02 IST)
மலையாள சினிமாவில் தற்போது இருக்கும் முக்கியமான இயக்குனர்களில் லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரியும் ஒருவர். அவர் இயக்கிய அங்கமாலி டைரிஸ், ஈ மா வு மற்றும் ஜல்லிக்கட்டு ஆகிய படங்கள் மிகப்பெரிய அளவில் விமர்சன ரீதியாக வரவேற்பைப் பெற்றவை. ஜல்லிக்கட்டு இந்தியாவின் சார்பாக ஆஸ்கருக்கு அனுப்பப்பட்டது.

அவரின் அடுத்த படமாக மோகன்லால் நடிப்பில் மலைக்கோட்டை வாலிபன் என்ற படத்தை இயக்கி கடந்த ஜனவரி 26 ஆம் தேதி ரிலீஸ் செய்தனர். இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் ரிலீஸுக்குப் பிறகு படம் பார்த்த ரசிகர்கள் மிகப்பெரிய ஏமாற்றத்திக்கு ஆளாகினர்.

இதனால் படத்தின் வசூல் மிக மோசமாக அமைந்துள்ளது. இந்நிலையில் இந்த படம் வரும் பிப்ரவரி 23 ஆம் தேதி முதல் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்