நடிகர்கள் வடிவேலு மற்றும் ஃபகத் ஃபாசில் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'மாரீசன்' திரைப்படம், எதிர்பார்த்த வசூலை பெறாமல் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளதாக கூறப்படுவது படக்குழுவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சுதீஷ் சங்கர் இயக்கிய 'மாரீசன்' திரைப்படம் வெளியானபோது, கலவையான விமர்சனங்களை பெற்றது. படத்தின் முதல் பாதி வடிவேலுவின் நடிப்புடன் சிறப்பாக அமைந்திருந்தாலும், இரண்டாம் பாதி ரசிகர்களை ஏமாற்றியதால், படம் பெரிய அளவில் கவனம் பெறவில்லை. இதுவே வசூல் பின்னடைவுக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
ரூபாய் 15 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் உருவான இந்த படம், வணிக ரீதியாக மிகப் பெரிய நஷ்டத்தை சந்தித்துள்ளது. இது படக்குழுவினரை மட்டுமல்லாமல், திரையுலக வட்டாரத்திலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.