இந்த படத்தை சுரேஷ் இயக்க, யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். படம் முடிந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் ரிலீஸாகாமல் இருந்தது. கடந்த ஆண்டு படத்தின் டிரைலர் ரிலீஸ் ஆகி கவனம் பெற்றது. ஆனால் அதன் பின்னரும் ரிலீஸ் பற்றி முறையான எந்த அறிவிப்பும் இல்லை.
இந்நிலையில் தற்போது இந்த படம் ஆகஸ்ட் 1 ஆம் தேதி ரிலீஸாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஒரு மிருகக்காட்சி சாலையில் காவலராகப் பணியாற்றும் ஒருவரின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை ஒட்டியக் கதை என்று சொல்லப்படுகிறது. இந்த படத்தின் பெரும்பாலானக் காட்சிகளை தாய்லாந்துக்கு சென்று படக்குழுவினர் படமாக்கி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.