மாநாடு ஓடிடி ரிலிஸ்… அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Webdunia
வெள்ளி, 17 டிசம்பர் 2021 (18:46 IST)
மாநாடு படத்தின் ஓடிடி ரிலிஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சிம்புவின் ‘மாநாடு’ படம் பல்வேறு தடைகளை தாண்டி  திரையரங்குகளில் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்றது. இந்த படத்திற்கு விமர்சகர்கள் பாசிட்டிவ் விமர்சனங்களை தந்து கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.  கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு பிறகு சிம்பு நடிப்பில் அனைத்துத் தரப்பினருக்கும் பிடித்த படமாக மாநாடு அமைந்துள்ளது. மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்த மாநாடு படத்தின் ஓடிடி உரிமையை சோனி லிவ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில் டிசம்பர் மாதம் 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை முன்னிட்டு ஸ்ட்ரீம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஒரு நாள் முன்னதாகவே டிசம்பர் 24 ஆம் தேதி வெளியாவதாக சோனி லிவ் அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்