படம் பிடித்தால் நாலு பேரிடம் சொல்லுங்க… பிடிக்கலைன்னா சைலண்ட்டா இருங்க- எம் எஸ் பாஸ்கர் பேச்சால் சர்ச்சை!

vinoth

வெள்ளி, 14 ஜூன் 2024 (08:11 IST)
தமிழ் சினிமாவில் டப்பிங் கலைஞராக தன்னுடைய வாழ்க்கையை தொடங்கியவர் எம் எஸ் பாஸ்கர். பின்னர் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்கள் அபிமானத்தைப் பெற்றார். இப்போது திரையுலகின் முன்னணிக் கலைஞராக இருக்கும் பாஸ்கர் சமீபத்தில் நடித்த டாணாகாரன் மற்றும் பார்க்கிங் ஆகிய திரைப்படங்களில் அவரின் கதாபாத்திரங்கள் வரவேற்பைப் பெற்றன.

அனைவராலும் விரும்பப்படும் ஒரு நடிகராக இருந்து வரும் எம் எஸ் பாஸ்கர் சமீபத்தில் ஒரு படத்தின் ப்ரமோஷன் நிகழ்வில் பேசியது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. லாந்தர் படத்தின் ஆடியோ வெளியீட்டு நிகழ்வில் “படம் பிடித்தால் நாலு பேரிடம் சொல்லுங்கள். பிடிக்கலைன்னா அமைதியாக இருந்து விடுங்கள். ஒரு படம் எடுக்க நிறையப் பேர் கஷ்டப்படுகிறார்கள். நிறைய பேர் படத்துக்காக உயிரை விட்டுள்ளார்கள். நீங்கள் கொடுக்கும் 120 ரூபாயில் ஒன்றும் ஆகிவிடப் போவதில்லை. நல்லா உள்ள மற்றும் நல்லா இல்லாத படங்களும் ஓடட்டும். அவர்களுக்கு வாய்ப்பளித்தால் பல குடும்பங்கள் வாழும்” எனக் கூறியுள்ளார்.

எம் எஸ் பாஸ்கரின் இந்த பேச்சு ரசிகர்களிடம் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. சமூகவலைதளங்களில் “ரசிகர்களும் கஷ்டப்பட்டுதான் சம்பாதித்து படம் பார்க்க வருகிறார்கள். அவர்கள் படம் பார்த்து நல்லா இருக்கு என சொல்வது போலவே நல்லா இல்லை என சொல்லவும் உரிமை உள்ளது” எனக் கூறி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்