லைகா நிறுவனத்தின் புதிய திரைப்படம்.. டைட்டில்- பர்ஸ்ட்லுக் போஸ்டர்..!

Webdunia
வியாழன், 16 பிப்ரவரி 2023 (11:49 IST)
தமிழ் திரை உலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான லைகா நிறுவனத்தின் அடுத்த பட அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாகி உள்ளது. 
 
’திருவின் குரல் என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் அருள்நிதி மற்றும் பாரதிராஜா முக்கிய கேரக்டரில் நடித்து வருகின்றனர் என்றும் நாயகியாக ஆத்மிகா நடித்து வருகிறார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
 ஹரிஷ் பிரபு இயக்கத்தில் சாம் சிஎஸ்  இசையில் உருவாகி வரும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை எடுத்து வருகிறது என்று குறிப்பிடத்தக்கது. 
 
இந்த படத்தின் படப்பிடிப்பை நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. ஏற்கனவே லைகா நிறுவனம் பொன்னியின் செல்வன் 2, லால் சலாம் உள்ளிட்ட பெரிய பட்ஜெட் படங்களை தயாரித்து வரும் நிலையில் தற்போது ’திருவின் குரல்’ படத்தையும் தயாரித்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்