மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் சில மாதங்களுக்கு முன்னர் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
முதல் பாகத்தின் வெற்றியால் இரண்டாம் பாகத்துக்கு மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன. இந்நிலையில் இப்போது படத்தின் கிராபிக்ஸ் பணிகள் நடந்துவரும் நிலையில் பணிகள் முடிவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. அதனால் அறிவித்த தேதியில் படம் ரிலீஸ் ஆவதற்கான வாய்ப்பு குறைந்துள்ளதாக சினிமா வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.